Mar 16, 2018

Daily Dose 16-3-18


ஆராதனைக்கு பாத்திரரான ஒரே தேவனாகிய நம் பரம பிதாவிற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

எபி 10:25 படிக்கும் போதெல்லாம், சபை கூடிவருதல் என்கிற தலைப்போடு விரிவாக்கத்தை பார்த்து கடந்து விடுகிறோமோ என்ற அச்சம் உள்ளது. இரண்டாவது பகுதியையும் நாம் கவனிக்க தவறக்கூடாது.

(வசனம் - சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; *நாளானது சமீபித்து வருகிறதை* எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்லவேண்டும்)

நாளைக்கு ஆராதனைக்கு வந்து விடுங்கள் என்று நினைவு படுத்தி அழைக்க வேண்டிய பரிதாப நிலையில் கிறிஸ்தவ வாழ்க்கை சிலருக்கு!!

மேலே பார்த்த வசனத்தின் இரண்டாவது பகுதி –
இன்னும் 7 நாள் இருக்கே,
இன்னும் 6 நாள் இருக்கே,
இன்னும் 5 நாள் இருக்கே..
இன்னும் 4 நாள் இருக்கே..   என்று நாள் நெருங்க நெருங்க கர்த்தருடைய ஆராதனை நாளுக்காக எதிர்நோக்கி ஆவலோடு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் சொல்லி உற்சாக படுத்த வேண்டும்..

*எடி ஜோயல்*
+968 93215440

All Glory and Honour to our Wonderful, Almighty Father in Heaven, who is ONLY WORTHY to receive the Worship.

Whenever we read Heb 10:25, I afraid we move on seeing the first sentence and ignore to concentrate also the second.

(Verse - Do not quit meeting together, as some people are in the habit of doing. Instead, encourage one another even more, since you see *the day coming closer*)

Pathetically, few developed a habit, unless they are reminded previous day, wont attend the worship !!

According to the second sentence…
We are to count, wait and longing that
Still 7 days more,
Still 6 days more,
Still 5 days more,
Still 4 days more etc..
Wait for the Lord’s day eagerly and advise one another every day for the gathering.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
- * - * - * - * - * - * - * -

Mar 15, 2018

Daily Dose 15-3-18


அன்பின் ரூபமாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்ட சொன்னதன் அர்த்தம் “பொறுமையை” குறிக்கிறது.

தன்னை விரோதிக்கிறவர்களையும் ஆதாயபடுத்துவதன் நோக்கமாக தான் கிறிஸ்து இருந்தார்.

அப்போஸ்தலர் பவுலும், தான் செய்யும் காரியத்தின் நிமித்தம் ஒருவர் விரோதித்தால், அவரை ஆதாயபடுத்தும் வண்ணமாக, அதையே செய்வேன் என்கிறார் !!  [மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக் குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப் போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன் (2Co 11:12)]

தன் கொள்கையில் இல்லாதவர்களை தடுக்கவேண்டாம் என்று சொன்னார்.. (லூக் 9:50 அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்)

எல்லா காலத்திலும் கிறிஸ்துவை எதிர்க்க ஜனங்கள் எழுந்தார்கள்  உணர்ந்தவர்கள், தங்கள் ஆத்துமாக்களை சம்பாதித்தார்கள். முரண்பாடு கொண்டவர்களோ – விழுந்து போனார்கள் (மத் 21:44)

எமோரியரியரின் அக்கிரமம் நிறைவாகும் வரை இஸ்ரவேல் ஜனம் கஷ்டப்பட்டது. அக்கிரமம் மிகுதியான போதோ, பிடுங்கப்பட்டு போனது !!  (ஆதி15:16)

அன்பும், நீடிய பொறுமையும், பராக்கிரமும், பயங்கரமுமான ஜீவனுள்ள தேவனை நாம் ஆராதிக்கிறோம். அவரை போல, நாம் ஒரு போதும் எவர் மீதும், வெறுப்பு கொள்ளாமல் சகல பொறுமையோடும், ஜெபத்தோடும் இருப்போம்.

*எடி ஜோயல்*
+968 93215440

Greetings to you in the name of our Ever loving Lord Jesus Christ.

“PATIENCE” is denoted when we read the instruction to show other chin if one is slapped.

Christ focused to gain even the person who opposed Him.

Apostle Paul also stressed the same that he will do further so his oppose will be like him one day !! [2 Cor 11:12 And what I do I will continue to do, in order to undermine the claim of those who would like to claim that in their boasted mission they work on the same terms as we do]

Christ said –  "Don't stop him! For whoever is not against you is for you." (Lk 9:50)

There are always people who opposes Christ. Those who recognize, secures his soul, others fell on Him. (Mt 21:44)

Till the Amorites iniquity filled out, Israelites were suffering. In other words, God punishes for sure, when iniquity fills up. (Gen 15:16)

We serve the Almighty, Powerful, Loving and Patience God. Let us reflect Him showing our Love and prayer for them in all our activities without showing anger or enmity to the opposers.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Flag Counter